#LabourCodes

 தொகுப்புச் சட்டங்களை  ஏன் எதிர்க்க வேண்டும்?

1 ‘தொழில்’ வரையறைச் சுருக்கம்:

உச்சநீதிமன்றம் முன்னர், தொண்டு நிறு வனங்கள், சமூக நிறுவனங்கள் உட்பட மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களையும் ‘தொழில்’ என அங்கீகரித்திருந்தது.

புதிய தொகுப்புச் சட்டம், அத்தகைய நிறுவனங்கள் ‘தொழில்’ கிடையாது என்கிறது. இதனால், அத்துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொழில் தகராறு எழுப்ப முடியாது.

அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு, தகவல் தொழில்நுட்பம் (IT), கிக் தொழில்கள் ஆகியவை ‘தொழில்’ என்ற வரையறைக்குள் வராது.

2 வேலை நிறுத்த உரிமை பறிப்பு:

• தற்போது பொதுப்பயன்பாட்டுத் தொழில்களுக்கு மட்டுமே வேலை நிறுத்த நோட்டீஸ் கட்டாயம் என்ற விதி இருந்தது.

• புதிய தொகுப்புச் சட்டம், அனைத்துத் தொழில்களிலும் வேலை நிறுத்த நோட்டீஸ் கட்டாயம் என்று ஆக்கிவிட்டது. நோட்டீஸ் கொடுத்தால் சமரசப் பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை நடக்கும்போது, லேபர் கோர்ட்டில் இருக்கும்போது வேலை நிறுத்தம் சட்டவிரோதம் ஆக்கப்படும்.

அப்படி, “சட்டவிரோத” வேலை நிறுத்தம் செய்தால் ₹1,000 முதல் ₹10,000 வரை அபராதம் அல்லது ஒரு மாதச் சிறை. தூண்டினால் ₹10,000 முதல் ₹50,000 அபராதம். எனவே, இந்த நாட்டில் இனி வேலை நிறுத்தமே சட்டவிரோதம் என்று ஆகும்.

3 ஆலை மூடல் மற்றும் நிலையாணையில் முதலாளித்துவம்:

• தற்போது 100 தொழிலாளர்களுக்கு குறைவாக இருந்தால் ஆலையை மூட அரசின் அனுமதி தேவையில்லை.  

• தொகுப்புச் சட்டம் இந்த வரம்பை 300 தொ ழிலாளர்கள் என்று உயர்த்துகிறது. இத னால் 90% தொழிற்சாலைகள் இந்தச் சட்டத்தில் இருந்து விலக்குப் பெறு கின்றன. மத்திய/மாநில அரசுகள் நினைத் தால் இந்த வரம்பை எவ்வளவு வேண்டு மானாலும் உயர்த்திக் கொள்ளவும் சட்டம் அனுமதிக்கிறது. 

• தொழிலாளர் உரிமைகளை நிர்ண யிக்கும் நிலையாணை (Standing Order) சட்டமும் இதேபோல 100லிருந்து 300 தொழிலாளர்கள் என்ற வரம்புக்கு உயர்த் தப்பட்டு, 90% ஆலைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதலாளி வைத்ததுதான் சட்டம் என்ற நிலை உருவாகும்.

4 ஒப்பந்த முறை திணிப்பு:

• நிரந்தரத் தன்மை கொண்ட வேலையிலும் ஒப்பந்த முறையைத் தொகுப்புச் சட்டம் புகுத்துகிறது. 

• ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் பொருந்தும் நிறுவனங்களின் வரம்பை 20 தொழி லாளர்களுக்கு மேல் என்பதிலிருந்து 50 தொழிலாளர்களுக்கு மேல் என உயர்த்தியுள்ளது.

• குறித்த கால ஒப்பந்த முறையை (Fixed Term Employment) சட்டப்படி ஆக்கி விட்டது.

#LabourCodes

Comments

#Election

2026 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சேலம் to மாநாட்டு சாலையில் 20 கிலோ மீட்டர் டிராபிக் ஜாம்

📌 *Key Highlights : Budget 2022*