பான் கார்டு விண்ணப்பிக்க இனி புதிய கட்டுப்பாடு – மத்திய அரசு முடிவு!
இந்தியாவில் முக்கிய ஆவணமான பான் கார்டில் பெரிய கட்டுப்பாடு கொண்டு வர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
பான் கார்டு
வருமான வரித் துறை மூலம் நிரந்தர கணக்கு எண் PAN கார்டு வழங்கப்படுகிறது. இந்நிலையில் பண பரிவர்த்தனை செய்ய பான் கார்டு அவசியம் ஆகும். அது மட்டுமில்லாமல் மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணமாக பான் கார்டு இருக்கிறது. இதை வங்கி கணக்குடன் அனைவரும் கட்டாயம் இணைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் ஆதார் எண்ணுடன் பான் கார்டை கட்டாயம் இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் மொத்தம் 70.24 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில் நாடு முழுவதும் பான் கார்டு வழங்குவதில் பெரிய கட்டுப்பாடு கொண்டுவர மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது தனியார் நிறுவனங்கள், சிறிய சிறிய அமைப்புகள் கூட பான் கார்டு விண்ணப்பம் செய்ய வழி உள்ளன.அதை மாற்ற மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதனால் இனி பான் கார்டுகளை முறையாக அனுமதி பெற்று மட்டுமே விண்ணப்பிக்க முடியும்
Comments
Post a Comment