#Election

வேலூர்: `நான் ஜெயிச்சா... என் சமூகத்துக்கே பெருமை!' - திருநங்கைக்கு அங்கீகாரம் கொடுத்த திமுக

மறுபக்கம் 🏹

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்புல செயலாளர் பொறுப்புல இருக்கிற நான், கலைக்குழுவும் நடத்துறேன். அதுல, 30 திருநங்கைகள், 20 ஆண்கள் இருக்கிறாங்க. கோயில் திருவிழாவில் கரகாட்டம், துக்க நிகழ்வில் பறையிசை வாசிப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்துறேன்.

அதுமட்டுமில்லாம... சொந்தமா காளிக் கோயில் கட்டி பல்வேறு சமூக சேவைகளையும், ஓல்டுடவுன் பகுதியில செஞ்சிக்கிட்டு வர்றேன். கலைஞர் ஐயாதான் மூன்றாம் பாலினத்தவர்களை ‘திருநங்கை’னு பெயர் வெச்சு பெருமைப்படுத்துனாரு. இப்போ, ஸ்டாலின் ஐயா... எனக்கு வாய்ப்பு வழங்கி, எங்க சமூகத்துக்கு மேலும் பெருமைச் சேர்த்திருக்கிறாரு. கொரோனா காலத்துல நகர்ப்புறத் தேர்தல் அறிவிச்சு கேன்சலாச்சே... அப்பவே நான் விருப்ப மனு கொடுத்தேன். என் வார்டு... பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. பெண் பாலினத் தகுதியிலதான் எனக்கு வாய்ப்பு வழங்கியிருக்கிறாங்க. என்னுடைய பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் போன்ற அனைத்து அடையாளச் சான்றிதழ்களிலும் என்னுடைய பாலினம் ‘பெண்’ என்றே குறிப்பிடச் செஞ்சிருக்கேன்.

அந்த பாஸ்ஸ்போர்ட்டை வைத்து, சிங்கப்பூர், மலேசியாவுக்கு விமானத்துல அடிக்கடி போயிட்டு வர்றேன். அந்த நாடுகள்ல இருக்கிற என் சமூகத்தினர் பலப்பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறாங்க. அவர்களைச் சந்திப்பதற்காகத்தான் அடிக்கடி போயிட்டு வர்றேன்’’ என்றவர், தேர்தல் களப்பணி குறித்தும் பேசினார்.

Comments

#Election

2026 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சேலம் to மாநாட்டு சாலையில் 20 கிலோ மீட்டர் டிராபிக் ஜாம்

📌 *Key Highlights : Budget 2022*