Skip to main content

`மொபைலில் 5ஜி சேவை, டிஜிட்டல் கரன்சி!- 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்

நாடாளு மன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார். இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர்.

இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

தொடர்ந்து 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*வரும் நிதியாண்டில் ஆர்பிஐ மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும். இந்திய பண மதிப்பான ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்.

  • நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த சாலை, ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நீர்வழித்தடங்கள், பொது போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து ஆகிய 7 முக்கிய துறைகளை உள்ளடக்கிய பிரதமரின் கதி சக்தி திட்டம் செயல்படுத்தப்படும்.

*ஒரு வகுப்பு, ஒரு சேனல் என்ற வகையில் 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும். 2 ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால் கற்பதில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்ய இந்த திட்டம் உதவும். 1 முதல் 12ம் வகுப்பு வரை மாநில மொழிக் கல்வி ஊக்குவிக்கப்படும்.

*மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம்,வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகிய 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

  • பள்ளி கல்வி துறையில் டிஜிட்டல் முறையில் கற்பிக்க கூடுதல் வசதி ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
  • 9.05 லட்சம் ஹெக்டேர்களுக்கு பாசனம், 65 லட்சம் மக்களுக்கு குடிநீர், நீர் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் வழங்க ரூ.44,605 கோடியில் கென்-பெட்வா இணைப்பு எடுக்கப்படும்.
  • கொரோனா தொற்றுநோய் மனநலப் பிரச்சினையை போக்க தேசிய தொலை நோக்கு மனநலத் திட்டம் தொடங்கப்படும்
  • நதிகள் இணைப்பு தொடர்பான 5 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • காவிரி – பெண்ணாறு இணைப்பு திட்டம் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுக்கு பின் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பார்வத்மாலா’ திட்டத்தின்கீழ் மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஊரக மாணவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் கல்வி கோவிட் பாதிப்பு காரணமாக இரண்டு வருடங்களாக பாதிக்கப்பட்டுள்ளதால் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களை உருவாக்க முடிவு.
  • நாட்டில் ரசாயனம் அற்ற இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்; வேளாண் நிலங்களை அளக்க, பயிர் சேதங்களை ஆராய டிரோன்கள் பயன்படுத்தப்படும்.
  • விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் தானியங்களின் அளவு அதிகரிக்கப்படும்
  • விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்காக 2.3 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்; அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
  • விவசாயிகளிடம் இருந்து 1,000 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு; வீடில்லாத 18 லட்சம் பேருக்கு 2023 ஆம் ஆண்டுக்குள் வீடுகள் கட்டித்தரப்படும்
  • வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மத்திய அரசின் 1,486 சட்டங்கள் ரத்து; தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
  • பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி திட்டம், ஊட்டச்சத்து திட்டம் மற்றும் வாத்சல்யா திட்டம் ஆகிய திட்டங்கள் அறிமுகம்.
  • டிஜிட்டல் சிப் கொண்ட இ-பாஸ்போர்ட் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்
  • வட மாநிலங்களில் உள்ள எல்லைப்புற கிராமங்களை மேம்படுத்த நடவடிக்கை; எல்லைப்புற கிராமங்களில் சுற்றுலா, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் .
  • நகர்ப்புறங்களை மேம்படுத்தவும், திட்டங்களை வகுக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உதவும்; இன்னும் 25 ஆண்டுகளில் 50% மக்கள் நகர்புறங்களில் வசிப்பார்கள்.
  • கொரோனாவால் அனைத்து தரப்பு மக்களும் மனநலம் சார்ந்த பிரச்னைக்கு ஆளாகியுள்ளனர்; தேசிய அளவில் மக்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்க டெலி மருத்துவ வசதி உருவாக்கப்படும்.
  • எரிசக்தியை சேமிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும் .
  • சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ.19,500 கோடி ஒதுக்கீடு ; உள்நாட்டு சூரிய ஒளி மின்சார தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்
  • இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஒலி, ஒளி, வரைகலை சார்ந்த பணிகள் ஊக்குவிக்கப்படும்.
  • 1 முதல் 12ஆம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • 2025 ஆம் ஆண்டுக்குள் 100% ஆப்டிக்கல் பைபர் நெட் வசதி உருவாக்கப்படும்.
  • ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும்; ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 68% நிதி உள்நாட்டு தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்
  • 2023 ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி. நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறும்; அனைத்து கிராமங்களுக்கும் இ-சேவை வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
  • நில ஆவணங்களை கணினிமயமாக்கி, ‘ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு’ திட்டம் ஊக்குவிக்கப்படும்.
  • நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும் ; தபால் நிலையங்கள் வங்கிகளுடன் இணைக்கப்படும்.
  • 2030ஆம் ஆண்டுக்குள் சூரியஒளி மூலம் 280 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு; நாட்டின் மூலதனச் செலவுகள் ரூ.7.5 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
  • ராணுவ தளவாட உற்பத்தியில் உள்நாட்டு தயாரிப்புகள் ஊக்குவிக்கப்படும்; ராணுவ தளவாடங்கள் வாங்குவதில் 68% நிதி உள்நாட்டு தயாரிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
  • ராணுவத்திற்கான ஆயுத இறக்குமதிகள் குறைக்கப்படும்.
  • எரிசக்தியை சேமிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும்

Comments

#Election

2026 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சேலம் to மாநாட்டு சாலையில் 20 கிலோ மீட்டர் டிராபிக் ஜாம்

📌 *Key Highlights : Budget 2022*