*ஒரே கொள்கைகள் கொண்ட கட்சிகளில் 4 முறை கட்சி தாவல் அதிமுக ஓட்டடிமை அட்ரா சிட்டி சின்னம்தான் வெவ்வேறு ஆனா கட்சிகளின் கொள்கைகள் ஒன்றுதான்*🏹👇 மறுபக்கம் #Election
*ஒரே கொள்கைகள் கொண்ட கட்சிகளில் 4 முறை கட்சி தாவல் அதிமுக ஓட்டடிமை அட்ரா சிட்டி சின்னம்தான் வெவ்வேறு ஆனா கட்சிகளின் கொள்கைகள் ஒன்றுதான்*
🏹👇 மறுபக்கம்
அதிமுக to அமமுக
அமமுக to அதிமுக
அதிமுக to பாஜக
விளையாட்டில் சாதனை, மருத்துவத்தில் சாதனை, விண்வெளி ஆய்வில் சாதனை என்று சாதனையில் எத்தனையோ வகைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விடுகிறது இந்த கட்சி தாவல் சாதனைகள்.. அந்த வகையில் முனுசாமி ஒரு ஷாக் தந்துள்ளார்.. அமமுக தென் சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர்தான் *நீலாங்கரை M.C. முனுசாமி*.
கடந்த ஜனவரி 29-ம் தேதி அதிமுகவில் இவர் இணைந்தார்.. அதுவும், முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்... அதற்கு பிறகு, ரெண்டே நாள்தான்.. நேற்று அதாவது 31-ம்தேதி பாஜகவிற்கு தாவிவிட்டார்.. அதுவும், பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கே முனுசாமி நேரில் சென்றுவிட்டார்.
கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நீலாங்கரை M.C. முனுசாமி தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.. 2 நாளில் நீலாங்கரை M.C. முனுசாமி 2 கட்சிக்கு தாவியுள்ளார்.. ஒரே நாளில் இவரது திடீர் மனமாற்றத்திற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. இவருடைய அரசியல் கொள்கையும் என்னவென்று தெரியவில்லை.. இதை அவரது ஆதரவாளர்கள் எப்படி எடுத்து கொள்வார்களோ அதுவும் தெரியவில்லை.. ஆக மொத்தம் அமமுக, அதிமுக, பாஜக என ஒரு ரவுண்டு அடித்துவிட்டார் முனுசாமி..!
Comments
Post a Comment