ஃபன்னும் அதிகம், எரிபொருள் சிக்கனமும் அதிகம்... இதோ 5 சூப்பரான சப்-300 சிசி பைக்குகளின் பட்டியல்!

ஐந்து சூப்பரான திறன் மற்றும் மைலேஜ் தரக் கூடிய சப்-300 சிசி பைக்குகளின் பட்டியலை இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.


என்னதான் சூப்பரான கார்கள் வீட்டில் இருந்தாலும் பலர் இருசக்கர வாகனத்தில் பயணிக்கவே அதிகம் விரும்புகின்றனர். ஏன், வீட்டில் உள்ள சிறுவர்களை காரில் போகலாமா?, பைக்கில் போகலாமா?, என கேட்டால் அவர்கள் பைக்குகளையே கை காட்டுவார்கள். இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும் பொருந்தும்.



அதிலும், அதிக சிசி திறன் அதிகம் கொண்ட பைக்குகளில் செல்வதையே பலர் விரும்புகின்றனர். என்னதான் பைக் பயணம் அதிக ஃபன்னானதாக இருந்தாலும் தற்போது பெட்ரோல் விக்குற விலை நம்மில் பலரை 'ரைடுக்கு எல்லாம் எதுக்குங்க?' என கேட்க செய்திருக்கின்றது.



இத்தகைய சூழ்நிலையைக் கையாளும் விதமாக நாட்டில் கணிசமான இருசக்கர வாகனங்கள் அதிக மைலேஜ் திறனுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதிக ஃபன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் சப்-300 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஐந்து பைக்குகள் பற்றிய தகவலையே பார்க்க உள்ளோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.


யமஹா ஆர்15 (Yamaha R15)

இந்திய இருசக்கர வாகன பிரியர்களின் விருப்பமான தேர்வாக யமஹா ஆர்15 காட்சியளிக்கின்றது. இந்த பைக் ரூ. 1.58 லட்சம் தொடங்கி ரூ. 1.83 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மிகவும் சூப்பரான ஸ்போர்ட் ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனம் இதுவாகும்.


155 சிசி திறன் கொண்ட பிரீமியம் எஞ்ஜின் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச், குயிக் ஷிஃப்டர் மற்றும் டிராக்சன் கன்ட்ரோல் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 18.4 பிஎஸ் முதல் 18.6 பிஎஸ் பவர் வரையிலும், 14 என்எம் டார்க்கையும் வெளியற்றும். மேலும், மைலேஜ் திறன் 35 கிமீ முதல் 45 கிமீ ஆக இருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இத்தகை சிறப்பான அளவிலேயே இப்பைக்கை மைலேஜை வழங்குகின்றது.


டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (TVS Apache RTR 200 4V)

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் விற்பனைச் செய்யும் சூப்பரான ஸ்போர்ட்ஸ் ஸ்டைல் கொண்ட இருசக்கர வாகனமாக இது காட்சியளிக்கின்றது. மேலும், குறைந்த விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் ஸ்டைல் கொண்ட பைக்காகவும் இது காட்சியளிக்கிறது. எனவேதான் இந்தியர்கள் மத்தியில் கணிசமான சிறந்த விற்பனை எண்ணிக்கையை இப்பைக் பெற்று வருகின்றது.


இந்த பைக்கில் 200 சிசி ஆயில் கூல்டு எஞ்ஜினை டிவிஎஸ் பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 21 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறன் கொண்டது. புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி ரூ. 1.36 லட்சம் தொடங்கி ரூ. 1.41 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும்.


ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35 கிமீ வரை இது மைலேஜ் வழங்கும். மேலும், இப்பைக்கை கூடுதல் சிறப்பானதாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக 3 ரைடிங் மோட்கள், அட்ஜஸ்டபிள் ஹேண்ட் லிவர்கள், ப்ரீ-லோட் அட்ஜஸ்டபிள் ஷோவா ஃப்ரண்ட் சஸ்பென்ஷன், ஷோவா ரியர் மோனோஷாக் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

யமஹா எஃப்இசட் 25 (Yamaha FZ 25)

யமஹா எஃப்இசட் 25 சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கக் கூடிய பைக்குகளில் இதுவும் ஒன்றாகும். இந்த பைக்கில் 250 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆகையால், மிக சிறந்த சப்-300 சிசி பைக்காக இது காட்சியளிக்கின்றது. அதாவது 300 சிசி பைக்கிற்கு இணையான திறனை வெளியேற்றும் பைக்காக இது காட்சியளிக்கின்றது.


அதிகபட்சமாக இந்த 250 சிசி எஞ்ஜின் 21 பிஎஸ் மற்றும் 20 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டிருக்கின்றது. பைக்கின் ஒட்டுமொத்த எடை 155 கிலோவாகும். 39 கிமீ முதல் 40 கிமீ வரை ஒரு லிட்டருக்கு இந்த பைக் மைலேஜ் தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக் நாட்டில் ரூ. 1.39 லட்சம் தொடங்கி ரூ. 1.43 லட்சம் வரையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.


பஜாஜ் பல்சர் 250 ட்வின்ஸ் (Bajaj Pulsar 250 Twins)

மிக சமீபத்திலேயே இந்த இரட்டையர்கள் பைக்கை பஜாஜ் நிறுவனம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிக சிறந்த திறனுடைய எஞ்ஜின் மற்றும் கவர்ச்சியான தோற்றம் என அசத்தலான அம்சங்களை இந்த பைக் கொண்டிருக்கின்றது. 250 சிசி எஞ்ஜினே பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 24.5 பிஎஸ் மற்றும் 21.5 என்எம் டார்க்கை வெளியேற்றும். இப்பைக்கை பஜாஜ் நிறுவனம் புதிய சேஸிஸை பயன்படுத்தி கட்டமைத்திருக்கின்றது. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 40 கிமீ வரையில் மைலேஜ் தரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கவாஸாகி நிஞ்ஜா 300 (Kawasaki Ninja 300)

நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த பட்டியலில் மிக மிக விலையுயர்ந்த பைக்காக இது காட்சியளிக்கின்றது. இந்த பைக் நாட்டில் ரூ. 3.24 லட்சம் என்ற உச்சபட்ச விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் கொண்ட பைக்காகும். இந்த பைக்கில் 296 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது.


இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 39 பிஎஸ் மற்றும் 26.1 என்எம் டார்க்கை வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் க்ளட்ச் அம்சங்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இவை மிக சிறந்த கியர் ஷிஃப்ட் அனுபவத்தை வழங்கும். இந்த பைக் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 30 கிமீ வரை மைலேஜ் வழங்கும். ஆகையால், இந்த பைக் மிக சிறந்த சப்-300 சிசி பைக்காக காட்சியளிக்கின்றது

Comments